‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் ‘சிறை’ படத்தில், அனந்தா, எல் கே அக்ஷய் குமார், அனீஸ்மா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவத்தைத் தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார் தயாரித்திருக்கிறார்.
இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
















