இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்தது மாபெரும் தவறு என அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இந்தியா, சீனா இடையே அதிபர் டொனால்டு ட்ரம்ப் காட்டும் பாராபட்சம் தவறானது என விமர்சித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவை காயப்படுத்தும் நோக்கில் ட்ரம்ப் விதித்துள்ள வரி, ரஷ்யா மற்றும் சீனாவை இந்தியாவுக்கு நெருக்கமாக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.