சுதந்திர தினத்தையொட்டி, தூய்மையான பாரதத்தை உருவாக்குவதற்காக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில், பாஜகவினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
நாட்டின் 78-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கோவை வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் விக்னேஷ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு, மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த தூய்மை பணியில் மாவட்ட செயலாளர் சாமிநாதன், மண்டல தலைவர் சரவணக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.