பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டண சுமையை குறைக்கும் நோக்கில், சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் திரும்பி வருவதற்கான ரயில் டிக்கெட் விலையில் 20 சதவீத தள்ளுபடியை ரயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு அக்டோபர் 13 முதல் 26-ஆம் தேதி வரை ஒருவழி பயணம் மேற்கொள்பவர்கள், நவம்பர் 17 முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரை அதே ரயில்களில் திரும்புவதற்கான டிக்கெட்டையும் முன்பதிவு செய்தால், அந்த திரும்பும் பயணத்துக்கான கட்டணத்தில் 20 சதவீத சலுகை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண சலுகை ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களுக்கு பொருந்தாது என்றும், இவற்றை தவிர மீதமுள்ள அனைத்து வகையான பயணிகள் ரயில்களிலும் இந்த 20 சதவீத டிக்கெட் கட்டண தள்ளுபடியை பெற முடியும் எனவும், ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.