இந்திய விமானங்களுக்கு வான்வெளி மூடப்பட்டதால் பாகிஸ்தானுக்கு 2 மாதங்களில் சுமார் ஆயிரத்து 240 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் உட்பட, பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
இதைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் விமானப் போக்குவரத்து சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு 2 மாதங்களில் சுமார் ஆயிரத்து 240 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான், இந்திய விமானங்களுக்கு தடை விதித்து, சொந்த காசிலேயே சூனியம் வைத்து கொண்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.