திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற வடமதுரை சௌந்தரராஜ பெருமாள் கோயிலில், கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆடி திருவிழா தொடங்கியது. இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு சௌந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.