சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து, சேலம் புதிய பேருந்து நிலைய நுழைவாயிலில், பெண் பயணி மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்து தலை, முகத்தில் ரத்தம் கொட்டியபடி, இருந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, பேருந்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு, ஓட்டுநரும், நடத்துநரும் தப்பிச் சென்றதால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, மாற்று ஓட்டுநர் மூலம் பேருந்து எடுத்து செல்லப்பட்டது.