கரூரில் துணை முதலமைச்சர் திறந்த வைத்த புதிய பேருந்து நிலையத்தில் ஒருநாள் பெய்த மழைக்கே குளம்போல தண்ணீர் தேங்கியதால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.
திருமாநிலையூர் பகுதியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை கடந்த மாதம் 9-ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். ஆனால் பணிகள் முற்றிலும் முடியாததால் ஒருநாள் பெய்த மழைக்கே பேருந்து நிலையத்தை சுற்றிலும் குளம்போல மழைநீர் தேங்கியது.
இதனால் அதிருப்தியடைந்த மக்கள், விளம்பரத்திற்காக மட்டுமே பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்து வருகின்றனர்.