உலகின் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் ரைசனில் உரையாற்றிய ராஜ்நாத் சிங்,
இந்தியா வேகமாக வளர்ச்சியடைவதில் சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்றும், நாம் 24 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
இது இந்தியாவின் பலம் என்றும், இந்தியர்களின் கைகளால் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள், அந்த நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களை விட விலை உயர்ந்ததாக மாற வேண்டும் என்று பலர் முயற்சி செய்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எந்த சக்தியும் இந்தியா, உலகின் பெரிய சக்தியாக மாறுவதை தடுக்க முடியாது என்று முழு நம்பிக்கையுடன் கூறுவதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய பிரதேசத்தின் வளர்ச்சியைப் பார்க்கும்போது, வரும் ஆண்டுகளில் மத்தியபிரதேசம் நவீன பிரதேசம் என்று அழைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.