நடிகர் தனுஷை காதலிப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து காதல் வதந்திகளுக்கு நடிகை மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை மிருணாள் தாகூர் நடிப்பில் உருவான சன் ஆஃப் சர்தார் 2 திரைப்படம் அண்மையில் திரையங்குகளில் வெளியானது. முன்னதாக இந்த திரைப்படம் தொடர்பான நிகழ்வில் நடிகை மிருணாள் தாகூருடன் நடிகர் தனுஷ் கலந்து கொண்டது திரையுலகில் சர்ச்சையை கிளப்பியது. நடிகை மிருணாள் தாகூரும், நடிகர் தனுஷும் காதலித்து வருவதாகவும் இணையத்தில் தகவல் பரவியது.
இந்நிலையில், தனுஷும் தானும் நல்ல நண்பர்கள் எனவும், தங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்றும் கூறியுள்ள நடிகை மிருணாள் தாகூர், காதல் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.