உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் ரன்னர்ஸ் கிளப் சார்பில், டைமிங் ஷிப்புடன் மாரத்தான் நடைபெற்றது.
5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர் என 3 பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தானை, காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர், காஞ்சிபுரம் சமூக ஆர்வலர் பாரூக், பயிற்சியாளர் ஆனந்த் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் திரளானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.