இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் வார்த்தைகளால் தன்னம்பிக்கை அடைந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட்-கீப்பர் சஞ்சு சாம்சன், அண்மை காலமாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத போதிலும் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில், அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து பேசியுள்ள சஞ்சு சாம்சன், தான் இரு ஆட்டங்களில் டக்-அவுட் ஆகி மனச்சோர்வுடன் அமர்ந்திருந்தபோது, அதைக் கவனித்த கம்பீர், தான் 21 ஆட்டங்களில் டக்-அவுட் ஆனால் மட்டுமே தன்னை அணியிலிருந்து நீக்குவேன் என விளையாட்டாகத் தெரிவித்ததாகக் கூறினார்.
தன்னம்பிக்கையை வலுபடுத்துவதில் கம்பீர் சிறந்தவர் எனவும் சஞ்சு சாம்சன் புகழாரம் சூட்டினார்.