செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியான சிங்கப்பெருமாள் கோயில் மறைமலைநகர், பரனூர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சிங்கப்பெருமாள் கோவில் முதல் மறைமலை நகர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.