தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் புதிய பேருந்து நிலையம், விளார், நாஞ்சிக்கோட்டை, வல்லம், பள்ளியக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை வெளுத்து வாங்கியது.
காற்றுடன் கொட்டித் தீர்த்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.