அமெரிக்காவுக்கு அதிக ஸ்மார்ட்போன்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 12 லட்சம் கோடி மதிப்பில் மின்னணு உற்பத்தி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் மின்னணு உற்பத்தி கடந்த 11 ஆண்டுகளில் ஆறு மடங்கு உயர்ந்திருப்பதாகவும், எலக்ட்ரானிக் பொருட்களின் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிபிட்டுள்ளார.
சர்வதேச அளவில் மொபைல் போன் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடம் வகிப்பதையும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
2014ம் ஆண்டு இந்தியாவில் 2 மொபைல் உற்பத்திய மையங்களே இருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் 300 மையங்கள் உள்ளன. இந்தியாவில் விற்பனையாகும் 99.2 சதவிகித மொபைல் போன்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.