திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வண்டி கருப்பசாமி கோயிலில் சட்டம் – ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி காவல்துறை சார்பில் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
நன்மை பெருக வேண்டும் என்பதற்காக ஆடி மாதத்தில் விரதமிருக்கும் மக்கள், கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் சட்டம் – ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி வண்டி கருப்பசாமி கோயிலில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டதுடன் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.