துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு துருக்கியில் 6 புள்ளி ஒன்று ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 11 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாகக் கட்டடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
பாலிகேசிர் மாகாணத்தில் 16 கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 2023ம் ஆண்டு துருக்கியில் 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.