ஜப்பானின் ஃபுகுவோகா பகுதியில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சிகுவோ, குருமே, மேற்கு ஒய்டா உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 110 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் அப்பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. சாலையில் பெருமளவு தேங்கி நின்ற மழைநீரால் வாகனங்கள் ஊர்ந்த வண்ணம் சென்றன.