தமிழக அரசின் நிதி நெருக்கடி காரணமாக வெளி மாநில தமிழ் சங்கங்களுக்குத் தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 40-க்கும் மேற்பட்ட தமிழ் சங்கங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளில், தமிழ் குடும்பத்தினரின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இவற்றுக்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரை தேவைப்படும் தமிழ்நாடு அரசு பாட நூல்கள் இதுவரை இலவசமாகவே கிடைத்து வந்தன.
இந்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக நடப்பாண்டு முதல், வெளி மாநில தமிழ் சங்கங்களுக்குத் தமிழ் பாடநூல் விநியோகத்தை அரசு ரத்து செய்துள்ளது.
குறிப்பாக வருங்காலங்களில் 10 பிரதிகள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, மீதமுள்ள பாடநூல்களை பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழ் சங்கங்களின் பள்ளிகளுக்குத் தமிழ் பாடநூல்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.