ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களைத் தியாகம் செய்து, பணயக் கைதிகளை விடுவித்தால் நாளைய தினமே போர் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.
இதுதொடர்பாகச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், காசாவில் இப்போதும் ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
அக்டோபர் 7-ம் தேதி நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை மீண்டும், மீண்டும் அரங்கேற்ற ஹமாஸ் அமைப்பினர் உறுதி கொண்டுள்ளதாகக் கூறிய அவர், இஸ்ரேலை அழிப்பதில் அவர்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காசாவை ஹமாஸ் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதே இஸ்ரேலின் நோக்கம் எனவும் உறுதிபட தெரிவித்தார்.