மெக்சிகோவின் குவானாஜுவாடோவில் பெய்த ஆலங்கட்டி மழையால் அப்பகுதி முழுவதும் பனி படர்ந்து காணப்பட்டது.
குவானாஜுவாடோவில் உள்ள இராபுவாடோவில் சக்தி வாய்ந்த ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள தெருக்கள் பனி படர்ந்து காட்சியளிக்கும் நிலையில், முன்கூட்டியே குளிர்காலத்தை அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.