சேலம் மாவட்டம், எடப்பாடி கொங்கணாபுரம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ராயணம்பட்டி காட்டுவளவைச் சேர்ந்த பெயிண்டர் தொழிலாளியான சௌந்திராஜன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கொங்கணாபுரம் அருகே சென்றபோது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி திடீரெனத் திரும்பியுள்ளது.
அப்போது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், சௌந்திராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.