சென்னையில் இளைய மகன் கொலை வழக்கில் மூத்த மகனைக் காப்பாற்ற தாய் காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சூளைமேட்டை சேர்ந்த பிரமிளா என்பவரின் இளைய மகன் முகில், மதுபோதையில் தினமும் தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி மதுபோதையில் வந்த முகில், தாயின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மகனைக் கொன்றுவிட்டாகக் கூறி காவல்நிலையத்தில் தாய் பிரமிளா சரணடைந்துள்ளார். விசாரணையில் மூத்த மகன் வசந்தகுமார், முகிலைக் கொலை செய்ததும் மகனைக் காப்பாற்ற பழியை தாய் ஏற்றுக் கொண்டதும் அம்பலமானது. இதையடுத்து வசந்தகுமார் அவரது நண்பர் கண்ணன் மற்றும் பிரமிளாவை போலீசார் கைது செய்தனர்.