ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
அம்மனூர் பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலரான அஸ்வினியின் கணவர் சுதாகரை, அப்பகுதியை சேர்ந்த அவினேஷ் கத்தியால் குத்தினார். இதுதொடர்பாகக் கைதான அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற அவினேஷை சுற்றிவளைத்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் அவினேஷ் உயிரிழந்த நிலையில், சுதாகர் உட்பட 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.