புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால் பதற்றம் நிலவியது.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உயர் சார்புப் பிரிவு அறையில் கடந்த 2 நாட்களாக எந்த நோயாளியும் சிகிச்சை பெறாத நிலையில், அதிகாலை 4.30 மணியளவில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயர் சார்புப் பிரிவு அறையிலிருந்து வெளியான புகையால், பக்கத்து அறையில் இருந்த நோயாளிகள் அலடிறித்து ஓடினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நோயாளிகள் யாரும் இல்லாத அறையில் வென்டிலேட்டர் ஆன் செய்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. மேலும், வென்டிலேட்டரை ஆன் செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.