கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென ரேடார் கோளாறு ஏற்பட்டது.
நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால் உட்பட 5 எம்பிக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பயணிகள் விமானத்தில் பயணித்தனர்.
எந்தத் திசையை நோக்கி விமானம் பறக்க வேண்டும் என்பதை காட்டும் ரேடாரில் கோளாறு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது.
அப்போது ஓடுதளத்தில் மற்றொரு விமானம் இருந்த நிலையில் விமானி உடனடியாக விமானத்தை மேலே உயர்த்தி அசம்பாவிதத்தைத் தவிர்த்தார். தொடர்ந்து 2 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.