தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை இரண்டு ஆண்டுகளில் காலி செய்ய வேண்டும் எனச் சென்னை உய ர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தைக் காலி செய்து கட்டடத்தை ஒப்படைக்கக்கோரி அதன் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டடத்துக்கான வாடகையை 6 லட்சம் ரூபாயில் இருந்து 13 லட்சம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்டார்.
கூடுதல் தொகையான 2 கோடியே 18 லட்சம் ரூபாயை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, 2 ஆண்டுகளில் கட்டடத்திலிருந்து காவல் ஆணையர் அலுவலகத்தைக் காலி செய்ய வேண்டும் என ஆணையிட்டார்.