சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஏ.ஐ. கண்ணாடிகள் பலரையும் கவர்ந்து வருகிறது.
தொழில் நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டமாக ஏ.ஐ. இன் செயல்பாடு உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதைச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட சீன நிறுவனங்கள் தங்களின் A.I. தயாரிப்புகள்மூலம் உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் சீனா ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் ஸ்மார்ட் கண்ணாடிகளைத் தயாரித்துள்ளது.
துல்லியமாக ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்தக் கண்ணாடிகளைக் கடந்த ஜனவரி மாதல் அமெரிக்காவில் சீன நிறுவனம் ஒன்று காட்சிப்படுத்தியது. இந்நிலையில் இந்த ஏஐ கண்ணாடிகள் உலகில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்கள் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.