ஹாங்காங்-ன் ஓஷன் பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 17 சுற்றுலா பயணிகள், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.
பிரபலமான இந்தப் பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறியாத பணியாளர்கள் பயணிகளை ஏற்றிய நிலையில், ராட்டினம் பாதியிலேயே நின்றது.
இதனால் 17 சுற்றுலா பயணிகள் அந்தரத்தில் தொங்கியபடி அதில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், ஒரு மணி நேரமாகப் போராடி சுற்றுலா பயணிளை மீட்டனர்.