தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகிய பலர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கும்பகோணம் மாதா கோயில் தெருவில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதனைப் பருகிய 25-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கடந்த 2 மாதங்களாக நீடித்து வரும் பிரச்னைகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.