சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சீன பொருட்கள் மீதான வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரவிருந்த நிலையில், சிறப்பு உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அப்போது பேசிய அவர் சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் ஒப்பந்தத்தின் மற்ற கூறுகள் அனைத்தும் அப்படியே இருக்கும் என தெரிவித்தார்.
இதற்கிடையே அமெரிக்காவுக்கான கட்டண வரி இடை நிறுத்தத்தை நீட்டிப்பது உள்ளிட்ட சலுகைகளை அமெரிக்காவுக்கு சீனா அறிவித்துள்ளது.
இரு நாட்டு அதிபர்களின் இந்த நடவடிக்கையால் அதிபர்கள் டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இடையே சந்திப்பு நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.