தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சாலை அமைப்பது தொடர்பாக திமுக பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் இடையே மோதல் ஏற்பட்டது.
கெங்குவார்பட்டி பேரூராட்சி தலைவராக தமிழ்ச்செல்வி என்பவரும், துணைத் தலைவராக ஞானமணி என்பவரும் உள்ளனர். ஞானமணியின் உறவினர் ஒருவர் 18 லட்ச ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை உரிய அனுதியின்றி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பணிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பு மோதல் ஏற்பட்டதில் காயமடைந்த கவுன்சிலர் உட்பட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்செல்வி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேனி – திண்டுக்கல் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல பேரூராட்சி துணைத்தலைவர் ஞானமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடைக்கானல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.