கடந்த ஜூன் மாதம் சன் டிவி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி உள்ளிட்டோருக்கு தயாநிதி மாறன் சட்ட அறிவிப்பு அனுப்பினார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சன் டிவி நிறுவனம், இந்த சட்ட விவகாரம் நிறுவனத்தின் வணிகம் அல்லது அன்றாட நிர்வாகம் தொடர்பானது அல்ல என்றும்,
இது சகோதரர்களுக்கு இடையிலான தனிப்பட்ட விவகாரம் எனவும் தெரிவித்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் மாறன் சகோதரர்களுக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கையில், கலாநிதி மாறனுக்கு எதிராக அனுப்பப்பட்ட சட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், குடும்ப விவகாரம் சன் டிவி நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.