அரசியல் ரீதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைச் சந்திக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழாவின் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது கணவருடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து பேட்டியளித்த அவர், திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு வசதிக்காக பேட்டரி வாகனம், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போதுமானதாக இல்லை எனக் குற்றம்சாட்டினார்.
சீமானைச் சந்தித்தது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், அது அரசியல் சந்திப்பு அல்ல அன்பான சந்திப்பு எனக் கூறினார்.