அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்டின் நகரில் பிரபலமான வணிக வளாகம் உள்ளது.
இங்குள்ள கார் நிறுத்தம் பகுதியில் நுழைந்த மர்ம நபர், யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் துப்பாக்கியால் அங்குள்ளவர்களை நோக்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தார்.
துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் அங்கிருந்த 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிக்க முயன்றவரைத் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.