பலூசிஸ்தான் விடுதலைப் படை மற்றும் அதன் மற்றொரு பெயரான மஜீத் படைப்பிரிவைப் பயங்கரவாத அமைப்புகள் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கனிம வளம் மிக்க மலைகள் நிறைந்த மாகாணமான பலூசிஸ்தானில், தங்களைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பலூசிஸ்தான் விடுதலைப் படை கோரிக்கை வைத்துவந்தது.
இதனிடையே பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு, தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்திடமும் சண்டையிட்டு வந்தது.
இந்த நிலையில், பல கொடூர தாக்குதல்களுக்குப் பிறகு பயங்கரவாத அமைப்புகள் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.