அமெரிக்காவின் மொண்டானாவில் தரையிறங்கிய சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வாஷிங்டனின் புல்மேன் விமான நிலையத்தில் இருந்து 4 பேருடன் புறப்பட்ட சிறிய ரக விமானம், மொண்டானாவின் காலிஸ்பெல் சிட்டி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி தீப்பிடித்துள்ளது. தொடர்ந்து, விமான நிறுத்துமிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் விமானம் மீது மோதியுள்ளது. இதில், சிறிய ரக விமானத்தில் பயணித்த விமானி உள்பட 4 பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.