சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் மற்றும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
மனுவானது நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவதில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்தனர் தமிழகத்தில் தெரு நாய்கள் கடித்துப் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாக வருத்தம் தெரிவித்த நீதிபதிகள்
சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களையும் கால்நடைகளையும் கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.