மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள் தான் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெளிவுப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயிக்க வங்கிகளுக்குச் சுதந்திரம் உள்ளது என்றும், அதனைத் தீர்மானிப்பது வங்கிகளே எனவும் கூறியுள்ளார்.
விரும்பும் தொகையைத் தீர்மானிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ள சஞ்சய் மல்ஹோத்ரா, இது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் கூறியுள்ளார்.