இந்தியாவில் 4 செமி கண்டக்டர் தொழிற்சாலைகளை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து விளக்கம் அளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் ஒடிசா, பஞ்சாப் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் மெட்ரோ ரயிலின் 1B கட்ட திட்டத்திற்காக 5 ஆயிரத்து 801 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 164 கோடி ரூபாய் மதிப்பில் 700 மெகாவாட் டாட்டோ-2 நீர்மின் திட்டம் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
72 மாதங்களில் அதற்கான பணி முடிவடையும் எனவும் இந்த திட்டத்தின் மூலம் 2 ஆயிரத்து 738 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.