நீலகிரி மாவட்டம், பந்திப்பூர் சாலையில் காட்டு யானையால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த நபருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
பந்திப்பூர் சாலையில் காரட் சாப்பிட்டுக் கொண்டிருந்த காட்டு யானையுடன் செல்பி எடுக்க முயன்ற நபரை யானை துரத்தித் தாக்கியது.
பொதுமக்கள் குரல் எழுப்பியதால் யானை காட்டுக்குள் ஓடிய நிலையில், உயிர் பிழைத்த நபர் கர்நாடகாவைச் சேர்ந்த பசுவராஜ் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பசுவராஜுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ள வனத்துறையினர், அவர் மூலம் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில், யாரும் வனவிலங்குகளுடன் விளையாட வேண்டாம் என்றும், வனப்பகுதி சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வனத்துறை தமக்கு அபராதம் விதித்துள்ளதாகக் கூறிய அவர், அதைவிட தமது உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.