சொத்து வரி வசூல் முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற 200 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு விவகாரம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஓய்வு பெற்ற உதவி ஆணையர் உட்பட 12 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தூத்துக்குடி உதவி ஆணையராக பணியாற்றிவரும் சுரேஷ்குமாரும் கைதானார். இந்த நிலையில், வழக்கின் புதிய திருப்பமாக மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த்-ஐ மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.