பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை சிந்து நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிட இந்தியாவிடம் கெஞ்சியுள்ளது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்லவில்லை.
இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலவல் பூட்டோ ஆகியோர் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என மிரட்டல் விடுத்தனர்.
இதனிடையே, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
சிந்து, செனாப், ஜீலம் ஆகிய மேற்கு நதிகளின் கீழ் பகுதியில் பாகிஸ்தான் இருப்பதால், அந்த நதிகளில் பாகிஸ்தானுக்கே உரிமை அதிகம் என சர்வதேச மத்தியஸ்த நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
பாகிஸ்தான் பகுதிகளுக்கு நீர் பாய இந்தியா அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.