சீனாவில் வீட்டுப் பணிகளை ரோபோ-க்கள் அசாத்தியமாக பார்ப்பது பலரையும் கவர்ந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி உலகம் அதிவேகத்தில் இயங்கி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் மனித வாழ்க்கையும் நாளாக்கு நாள் பரபரப்பாக ஓடுகிறது. இதற்கு மத்தியில் மனிதர்களுக்கு உதவும் விதமாக நவீன மனித ரோபோக்களை சீன நிறுவனங்கள் தயாரித்து அசத்தியுள்ளன. வீட்டை தூய்மைப்படுத்துவது, ருசியாக உணவு சமைத்து தருவது என ரோபோக்-கள் செய்யும் வேலைகள் நீள்கிறது.
இது ஒரு புறமிருக்க, மற்றொரு புறம் போக்குவரத்தை சரிசெய்யும் நவீன ரோபோக்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. நெரிசல் மிகுந்த ஷாங்காய் மாகாணத்தில் ரோபோ ஒன்று போக்குவரத்தை சரி செய்துள்ளது. சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ரோபோவின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.