சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஒலிப்பெருக்கியின் சத்தத்தைக் குறைக்கக் கூறிய போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ரங்கநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள கோயில் ஒன்றில் ஆடித்திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்தது.அப்போது அதிக இரைச்சல் ஏற்படுவதாக போலீசாருக்கு சிலர் புகாரளித்தனர்.
அதன் பேரில் அங்குச் சென்ற போலீசார் சத்தத்தைக் குறைக்குமாறு அறிவுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் யாக்கோபு என்பவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.