சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தேசியக் கொடி ஏந்தி யாத்திரையில் ஈடுபட்டனர்.
நாட்டின் 79 ஆவது சுதந்திர தினம் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஹர் கர் திரங்கா என்ற பெயரில் மக்கள் தேசியக் கொடி ஏந்தி யாத்திரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பேரணியில் துணை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் தோடாவில் ஆயிரத்து 500 மீட்டர் நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தி மக்கள் யாத்திரையில் ஈடுபட்டனர்.