ஆலங்குடி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு உட்கொண்ட 8 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பூனாயிருப்பு கிராமத்தில் செயல்படும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வழக்கம்போல மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது, அரிசி உப்புமா சாப்பிட்ட 8 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 8 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.
அரிசி உப்புமாவில் பல்லி கிடந்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.