2028 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக பெருவிழாவில் நாள்தோறும் 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
2028ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெறவுள்ள மகாமக பெருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கூட்ட நெரிசல் மற்றும் வாகன நெரிசலைச் சமாளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், துறை சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்துத் திட்ட அறிக்கை தயார் செய்து விரைவில் வழங்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறினார்.