விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சுகாதார சீர்கேட்டால் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செ.குன்னத்தூர் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் 35க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செ.குன்னத்தூர் கிராம ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் சுதந்திர தினத்தன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.