சென்னை திருவொற்றியூர் அருகே மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட வீடுகளுக்குச் சீல் வைக்கப்பட்டது.
சாத்தங்காடு பகுதி 7-வது வார்டு ஒத்தவாடை தெருவில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் பல வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற சென்னை மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் உதவியுடன் 8 வீடுகளுக்குச் சீல் வைத்தனர்.
அப்போது வீட்டை காலி செய்யச் சிறிது கால அவகாசம் தரும்படி கெஞ்சிய குடியிருப்புவாசிகளை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
இதனால் போலீசார் மற்றும் குடியிருப்புவாசிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவு நகலைக் காட்டாமலேயே மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ள குடியிருப்புவாசிகள், வீட்டை காலி செய்யக் கால அவகாசம் அளிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.